(நா.தனுஜா)

சீனா, இலங்கையுடனான நல்லுறவிற்கு தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கி வருகின்றது. மேலும் இருநாடுகளும் அடைந்துகொள்ளத்தக்க நிலைபேறான அடைவுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தி வருகின்றது. துறைமுக நகரத்திட்டப் பணிகளில் முக்கியமானதாகக் கருதத்தக்க 269 ஹெக்டேயர் கடற்பரப்பை மண்ணால் நிரப்பும் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.

இது சீன - இலங்கை நாடுகளுக்கு இடையிலான நெடுங்கால நட்புறவின் அடையாளமாகத் திகழும். அதேபோன்று சீனா மற்றும் இலங்கை மக்களுக்கு இடையிலான நெருங்கிய பிணைப்பினை எடுத்துக்காட்டுவதாகவும் அமையும் என இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் சுயுவான் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 269 ஹெங்டேயர் கடற்பரப்பிற்கு மணல் நிரப்பும் வேலைத்திட்டம் நிறைவடைந்துள்ளது. 

இதனை முன்னிட்டு இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.