(நா.தினுஷா)

குமார் சங்காகார சுகாதார வேலைத்திட்டங்கள் தொடர்பிலேயே என்னிடம் கலந்துரையாடினார். 

மேலும்  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் குமார் சங்ககாரவுக்கும் தனக்கும் இடையில்  எவ்வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என்றும் வெறும் 10 நிமிடங்கள் மாத்திரமே இருவரும் கலந்துரையாடியதாக சுகாதார அமைச்சர்  ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார். 

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் கிரிக்கெட் விளையாட்டு வீரர் குமார் சங்கக்காரவுக்கும் இடையில் இரண்டு மணிநேர பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன. 

இன்று புதன்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த கலந்துரையாடல் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.