கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாண மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில்  சட்டவிரோதமான முறையில் கேபிள் கம்பங்கள் ஒரு நிறுவனத்தினால் நாட்டப்பட்டு இருந்தன.

நாட்டப்பட்டு இருந்த மின்கம்பங்கள் அனைத்தும் யாழ்ப்பாண மாநகர முதல்வரினால் அகற்றப்பட்டிருந்தது.

இது தொடர்பில் குறித்த கேபிள் கம்பங்களை நாட்டிய நிறுவனத்தினரால் யாழ் மாநகர முதல்வருக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதியப்பட்டிருந்தது.

எனவே யாழ்ப்பாண பொலிஸாரினால் நேற்று காலை 11 மணிக்கு  மாநகர முதல்வரை விசாரணைக்கு வருமாறு யாழ்ப்பாண பொலிசாரால்  அழைக்கப்பட்ட போதிலும் அவர் தனது வேலைப் பழு காரணமாக பொலிஸ் நிலையத்திற்கு சமுகமளிக்காத நிலையில்  இன்றையதினம் பொலிசாரினால் யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் அலுவலகத்தில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

எனினும் விசாரணைக்காக வந்த பொலிஸார், யாழ் மாநாகர முதல்வரை பொலிஸ் நிலையத்துக்கு வந்து வாய் முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு கோரிய போதிலும் மாநகர முதல்வர் அதற்கு தனது மறுப்பினை தெரிவித்ததை அடுத்து எதிர்வரும் 18 ஆம் திகதி பொலிசாரினால் மாநகர முதல்வர் அலுவலகத்தில் வைத்து அவருடைய வாக்குமூலத்தைப் பதிவு செய்வதாக  இன்றைய தினம் முடிவெடுக்கப்பட்டுள்ளது.