(ஆர்.யசி)

ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்னமும் எவரது பெயரையும் தீர்மானிக்கவில்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மாற்றுக் கருத்துக்கள் நிலவுகின்றமை குறித்து கருத்துக்கள் வெளிவருகின்ற நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஐக்கியமாகவும் கூட்டணியை அமைக்க வேண்டிய பொறுப்புமே  இப்போது எமக்கு உள்ளது.

ஜனாதிபதி தேர்தல் குறித்து ஆராய எமக்கு இன்னமும் நீண்ட காலம் உள்ளது. முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே கூறியுள்ளார். ஆகவே முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும். அதற்கு எமது கட்சியை தயார்ப்படுத்த வேண்டும்.