முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் இந்தியப் பிரஜை ஆகியோரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சதி முயற்சி மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் இந்திய பிரஜை ஆகியோரை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.