(எம்.மனோசித்ரா)

நாட்டுக்காக எத்தகைய பொறுப்பினையும் ஏற்கத் தயாராகவே உள்ளேன் என மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் முன்னாள் சபாநாயகருமான சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி தேர்தல்கள் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியது. நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிக்கு பின்னர் இன்னும் ஸ்திரமான நிலைமை தேசிய அரசியலில் உருவாகவில்லை.

அரசியல் நெருக்கடி ஏற்பட்டு இன்றும் ஒரு ஸ்திரமற்ற ஆட்சியே நாட்டில் காணப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலையில் எதிர்காலம் குறித்து அனைத்து தரப்புக்களும் சிந்திக்க வேண்டும். 

எதிர்வரக் கூடிய முக்கிய தேர்தல்களான ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் நாட்டில் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடியதாக உள்ளன எனவும் தெரிவித்தார்.