பிபிலை- பதுளை பகுதியில் தனியார் பஸ் ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் 8 பேர் காயமடைந்த நிலையில், ஆறு பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பிபிலையிலிருந்து பதுளையை நோக்கிச் சென்ற தனியார் பஸ் ஒன்று இன்று பகல் “ஹேபொல” என்ற பாதையை விட்டு விலகி ஐம்பது அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த எட்டுப் பயணிகளுக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளன. 

இந்நிலையில் காயமடைந்தவர்கள் பிபிலை அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பிபிலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.