பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில் நாய் ஒன்று கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பலாங்கொடை – மஸ்சென்ன பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இச்சம்பவம், நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் 50 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த வீட்டில் நாயை காணாததால், அதனை தேடியுள்ளனர். இதன் போது அயல் வீட்டில் இருந்து நாயின் சத்தம் கேட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த நாய் மீட்கப்பட்டு மிருக வைத்தியரிடம் கொண்டு செல்லப்பட்ட போதும் அது உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ந்நிலையில், 50 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேகநபர் நாயினை துஷ்பிரயோகம் செய்த பின்னர் அதனை கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கது.