இந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில்  மிகவும் வலிமையுடைய உலகின் தலைசிறந்த அணியாக மாற்றுவதே எனது நோக்கம் என இந்திய அணியின் தலைவர் விராட்கோலி தெரிவித்துள்ளார்.

இது எனது இலக்கு என தெரிவிக்கமாட்டேன் எனது தொலைநோக்கு இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் வருடங்களில் இந்திய அணியை மிகவும் வலுவான டெஸ்ட் கிரிக்கெட் அணியாக மாற்றுவதே எனது தொலைநோக்கு என அவர் தெரிவித்துள்ளார்

இந்திய கிரிக்கெட் டெஸ்;ட் கிரிக்கெட்டை மதித்தால், இந்திய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை மதித்தால் இதன் காரணமாக உலகம் முழுவதும் இரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதன் காரணமாக இந்திய டெஸ்ட் அணி உச்சத்திலேயே காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருநாள் மற்றும் ரி 20 போட்டிகளில் மாத்திரம் நாங்கள் கவனம் செலுத்தினால் எதிர்கால வீரர்களின் மனோநிலையில் தாக்கங்கள் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளாh.

இதனை தவிர்ப்பதற்காக அணி கலாச்சாரமொன்றை பேணி அடுத்த தலைமுறைக்கு வழங்கவேண்டும் எனவும் கோலி தெரிவித்துள்ளார்.

ஐந்து நாளும் அதிகாலையில் எழுந்து கடினமாக பாடுபடுவதற்கும்,தேவைப்பட்டால் அணிக்காக இரண்டு மணித்தியாலங்கள் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் துடுப்பெடுத்தாடுவதற்கும்  வீரர்கள் தயாராகயிருக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணி எனது தொலைநோக்கை அடைவதற்காக சில விடயங்களை செய்யவேண்டியிருக்கும் பின்னர் வருபவர்கள் அதனை பின்பற்றவேண்டியிருக்கும் எனவும் விராட்கோலி தெரிவித்துள்ளார்.

அடுத்த தலைமுறை வீரர்கள் இந்த தொலைநோக்கை பேணவேண்டும் அப்படி அவர்கள் நடந்துகொண்டால் அடுத்த தலைமுறையினரும் அதனை பின்பற்றுவார்கள் என  விராட்கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரியையும் பாராட்டியுள்ள விராட்கோலி அணித்தலைவராக நான் வளர்ச்சிகாண்பதற்கு அவரின் கருத்துக்களே உதவியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ரவி சாஸ்திரி பல போட்டிகளிற்கு வர்ணணையாளராக பணியாற்றியுள்ளார், பல போட்டிகளை பார்த்துள்ளார் அதன் காரணமாக ஒரு போட்டி எந்த திசையில் சென்றுகொண்டிருக்கின்றது என்பது அவரிற்கு தெரியும் எனவும் கோலி குறிப்பி;ட்டுள்ளார்.