(எம்.மனோசித்ரா)

இலங்கைக்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையில் 6 உடன்படிக்கைகள் கைசாத்திடப்படவுள்ளன. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிலிப்பைன்ஸ் விஜயத்தின் போது இருதரப்பு நட்புறவு புரிந்துணர்வு மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு இவ் ஆறு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 

உத்தியோகபூர்வ வியத்தை மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழு இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில் , சுற்றுலாத்துறை ஆய்வு மற்றும் அபிவிருத்தி, கல்வி மற்றும் பயிற்சி சுற்றுலா மேம்பாட்டு வேலைத்திட்டம், முதலீடு மற்றும் இருதரப்பினரால் தீர்மானிக்கப்படும் ஏனைய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம்,  இரு நாடுகளுக்குமிடையில் ஊழியர் சேமலாபம் மற்றும் உரிமைகளை பாதுகாத்தல் திறனாற்றல் சேவைநிலை தொழில் ரீதியில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தல் குடியகல்வு பணியாளர்களை பயிற்றுவித்தல் மற்றும் உறுதி செய்தல் மற்றும் ஊழியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சட்ட உதவிகளை வழங்குதல் போன்ற துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட  6 ஒப்பந்தங்கள் கைசாத்திடப்படவுள்ளது.