வர்த்தகர் ஒருவரை வாகனம் ஒன்றின் ஊடாக தெற்கு அதிவேக வீதியில் கடத்திச் சென்ற மூவரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

குறித்த  சம்பவம் சினிமா பாணியில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காலி ஹாங்கம பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கடத்திச் செல்லும் போது பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் பயணித்த வாகனம் தமது பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வர்த்தகரை எதற்காக கடத்தினார்கள் என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை.

கைப்பற்றப்பட்ட வாகனம் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.