மதயானை கூட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கதிர். அதன் பின் கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள் படங்களில் நடித்து பிரபலமானார். அவரின் நடிப்பில் தயாரான சிகை என்ற படம் நாளை முதல் மொபைல் எப்ஸில் வெளியாகிறது. இந்நிலையில் அவர் தளபதி 63 படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

தெறி, மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார் அட்லீ. ‘தளபதி63’ என்று குறிப்பிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ள இந்த படத்தில் கொமடி நடிகர் யோகி பாபு நடிக்கவிருப்பதை தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்தது. அதனைத் தொடர்ந்து முக்கியமான கேரக்டரில் நடிக்க நடிகர் கதிரை தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் செய்திருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இந்த வாய்ப்பு குறித்து கதிர் பேசுகையில்,

“ இயக்குநர் அட்லீக்கும் எமக்கும் இடையே நட்பு இருந்தாலும், அவர் எனக்கு பொருத்தமான கேரக்டர் இருந்தால் அவரை அழைப்பார். அதனால் அவரின் அழைப்பின் பேரில் அவரை சந்தித்தேன். தளபதி 63 படத்தில் என்னுடைய கேரக்டர் பற்றி சொன்னார். எனக்கு பிடித்திருந்தது. மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன்.” என்றார்

இவர் நடிப்பில் தயாராகியிருக்கும் சத்ரு படத்தின் டிரைலர் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.