அ.தி.மு.க. அரசை கவிழ்க்க ஸ்டாலின் பல்வேறு வகையில் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளரான கே. பி. முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

“ டில்லியில் புலனாய்வு பத்திரிகை எனக்கூறிக் கொண்டு சிலர் தேவையற்ற கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

கொடநாடு தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ள நிலையில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேவையற்ற புகார்களை தெரிவித்து வருகிறார்.

கொடநாடு விவகாரம் குறித்து சசிகலாவிடம் தான் கேட்கவேண்டும். முதல்வர் பழனிச்சாமியிடம் கேட்பதற்கு என்ன இருக்கிறது? ரஃபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்யவேண்டும் எனக்கூற ஸ்டாலினுக்கு தைரியம் இல்லை. பொங்கல் திருநாளை யொட்டி பரிசு பொருள்களுடன் ஆயிரம் ரூபா பரிசாக வழங்கியதை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் அ.தி.மு.க. அரசை கவிழ்க்க பல்வேறு வழிகளில் தொடர்ந்து முயற்சிக்கிறார்.” என்றார்.