(எம்.ஆர்.எம்.வஸீம்)

புதிய அரசியலமைப்பு தயாரிப்பதற்கான எந்த தேவையும் அரசாங்கத்திடம் இல்லை. மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் அமைக்கப்பட்ட சர்வகட்சி குழுவின் பரிந்துரைகளை முன்னெடுத்துச்சென்றிருந்தால் இந்நிலையில் அரசியலமைப்பு தயாரிக்கப்பட்டிருக்கும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.