(ஆர்.யசி)

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க புதிய அரசியல் அமைப்பினை காட்டி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். 

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவோ எதிர்க்கவில்லை. 

நாட்டினை பிளவுபடுத்த வேண்டாம் என்பதே அவார்களின் கோரிக்கையாக உள்ளது. 

அரசியல் அமைப்பு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களை ஏமாற்றி  வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டார். 

புதிய அரசியல் அமைப்பு விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே டிலான் பெரேரா எம்.பி இதனைக் குறிப்பிட்டார்.