(ஆர்.யசி )

யுத்தத்தின் பின்னர் புலிகளின் ஆயுதங்களே இன்று பாதாள கோஷ்டிகளின் கைகளில் உள்ளது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். 

நாட்டில் இடம்பெறும் மனித படுகொலைகளைகளுக்கு பாதாள கோஷ்டிகளே காரணம். கொலைகளை  தடுக்க பொலிசாரின் செயற்பாடுகளுக்கு இராணுவ ஒத்துழைப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் தாம் தயாராக உள்ளோம்.

 பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நேற்று கண்டி அஸ்கிரிய மல்வத்து தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.