(ஆர்.யசி)

அரசியல் அமைப்பு செயற்பாடுகளில்  இதுவரை தமிழர் தரப்பின் ஒத்துழைப்பு வழங்கபடாத நிலையில் முதல் தடவையாக புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் தமிழ் அரசியல் தலைமைகள் ஈடுபடுகின்றனர். 

இந்த சந்தர்ப்பத்தை தவறவிட்டால் இனி எப்போதும் இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காது என ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சரும் பாராளுமன்ற சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். சமஷ்டியோ -வடக்கு கிழக்கு இணைப்போ எமது தீர்மானம் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டார். 

புதிய அரசியல் அமைப்பு உருவாக்கம் குறித்து அரசியல் கட்சிகள் கருத்துக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர்  லக்ஷ்மன் கிரியெல்ல இதனைக் குறிப்பிட்டார்.