(ஆர்.விதுஷா)

வத்தளை -ஹெந்தல  பகுதியில் வெளிநாட்டில்  வேலை வாங்கித்தருவதாக கோரி பணமோசடியில்  ஈடுபட்ட  இந்திய பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.  

குறித்த கைது  நடவடிக்கை  கொழும்பு  மோசடி  விசாரணைப் பிரிவினரால்  நேற்று முற்பகல் 9.45 மணியளவில் இடம் பெற்றுள்ளதுடன் ,  30 வயதுடைய  இந்திப்பிரஜையொருவரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர்  வெளிநாட்டில்  வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கோரி  10 இலட்சத்து  50 ஆயிரம் ரூபாய் வரையில்  பணமோசடியில்  ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளின்  போது தெரியவந்துள்ளது.  

அத்துடன், சந்தேக நபர் இன்றைய தினம்  கொழும்பு  மோசடி  விசாரணைப்பிரிவினரால்  கோட்டை நீதவான் நீதி மன்றத்தில்  ஆஜர்ப்படுத்தியதையடுத்து  அவருக்கு பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன்,  அவருடைய வழக்கு விசாரணைகள்  எதிர்வரும் பெப்பிரவரி மாதம்  04 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.