(ஆர்.விதுஷா)

நாட்டின் இரு வேறுபட்ட பகுதிகளில்  முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர்கள்  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்  நேற்று பிற்பகல்  வேளையில் முன்னெடுக்கப்பட்டள்ளதுடன்,  முகத்துவாரம் , ஏகொட உயன ஆகிய பகுதிகளிலேயே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள்  பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம்  தெரிவித்துள்ளது.  

அதற்கமைய ,  முகத்துவாரம்  -  மாதம்பிட்டிய சந்திக்கு அண்மையில்   4 கிராம்  900 மில்லிகிராம் ஹெரோயின்  போதைப்பொருளுடன்  35 வயதுடைய  ஜா-எல பகுதியை சேர்ந்த  தனுஷ்க  சமன் எனப்படுபவர் கைது  செய்யப்பட்டுள்ளார். மேற்படி நபர் நேற்று  இரவு 7.45 மணியளவிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபரை  மாளிகாகந்தை  நீதவான் நீதி மன்றத்தில்  ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  முகத்துவாரம் பொலிசார் இன்றைய தினம் மேற்கொண்டதுடன்,  மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.