வவுனியா ஈரட்டைபெரியகுளத்தில் இன்று (15.01.2019) மதியம் 1.45 மணியளவில் இரு இளைஞர்கள் குளத்தினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் ,

வவுனியா ஈரட்டைபெரியகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரட்டை பெரியகுளத்திற்கு அருகே ஆறு இளைஞர்கள் மதிய உணவு அருந்தியுள்ளனர்.

அதன் பின்னர் கைகழுவச் சென்ற சமயத்தில் குளத்தினுள் ஒரு மாணவன் தவறி வீழ்ந்துள்ளார். இந்நிலையில் வீழ்ந்த அவரை காப்பாற்ற சென்ற மற்றைய  மாணவனும் தவறி வீழ்ந்து  இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்ட விபுலானந்தாக்கல்லூரியின் சாதாரணதர மாணவர்களான 16 வயதுடைய திபின்சன் மற்றும் கரிகரன் ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர். 

இவர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஈரட்டைபெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.