இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைவோர் கைதுசெய்யப்படுவர் - கடற்படை

Published By: Priyatharshan

15 Jan, 2019 | 03:01 PM
image

(ஆர்.விதுஷா)

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி  பிரவேசிப்பவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரிய பண்டார தெரிவித்தார். 

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்து மீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை  அதிகரித்துள்ளது. 

இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளின்  காரணமாக  வடபகுதி மீனவர்களின் வலைகளுக்கு பாரிய சேதம்  ஏற்பட்டுள்ளதுடன், அவர்களது வாழ்வாதாரம்  பாதிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி  பிரவேசிப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.

கடந்த 12 ஆம் 13  ஆம் திகதிகளில் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள்   500 இற்கும்  அதிகமான  இந்திய படகுகள்  அத்துமீறி நுழைந்தமை இலங்கை கடற்படையினரால்  அவதானிக்கப்பட்டுள்ளது.  

இதன்போது இரண்டு படகுகளில்  இருந்த   9 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு  எதிர்வரும்  17  ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள்  தமிழகத்தின் புதுக்கோட்டை  பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது  தெரியவந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00
news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03