400 கோலை பதிவுசெய்த மெஸ்ஸி

Published By: Priyatharshan

15 Jan, 2019 | 02:10 PM
image

லா லிகா கால்பந்து தொடரில் 400 ஆவது கோலை பதிவு செய்து பார்சிலோனாவின் முன்னணி வீரரான மெஸ்ஸி சாதனைப் படைத்துள்ளார்.

ஆர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா லீக்கில் விளையாடி வருகிறார். 

நேற்றுமுன்தினமிரவு நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா - எய்பர் அணி மோதின. இதில் பார்சிலோனா 3-0 என வெற்றி பெற்றது. நட்சத்திர வீரர் மெஸ்ஸி ஒரு கோலும், சுவாரஸ் இரண்டு கோலும் அடித்தனர்.

இந்த போட்டியில் கோல் அடித்ததன்  மூலம் மெஸ்ஸி லா லிகாவில்  400 கோல்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். 

ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் முன்னணி ஐந்து லீக் தொடரில் ஒரே தொடரில் 400 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

ஒட்டுமொத்தமாக அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 2 ஆவது இடம்பிடித்துள்ளார் மெஸ்ஸி. கிறிஸ்டியானோ ரொனால்டோ 507 போட்டிகளில் விளையாடி 409 கோல்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். ரொனால்டோ ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி நாடுகளில் உள்ள கழக அணிகளுக்காக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20
news-image

14 வயதின் கீழ் பாடசாலை சமபோஷ...

2025-02-09 11:13:16
news-image

மூத்த வீரர்களுக்கான கால்பந்தாட்ட சமரில்; எட்டு...

2025-02-08 20:52:34
news-image

திமுத் கருணாரட்னவின் கடைசித் துடுப்பாட்டம்; நாளை...

2025-02-08 20:49:02
news-image

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின்...

2025-02-08 20:46:18
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: கொழும்பு இந்துவை...

2025-02-08 21:05:32
news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52