இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு விபத்துக்குள்ளான விமானத்தின் குரல் பதிவுக் கருவி அடங்கிய 2 ஆவது கருப்பு பெட்டி மீட்கப்பட்டது.

இந்தோனேசியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் திகதி தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட லயன் எயார் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஜாவா கடலில் வீழ்ந்து நொறுங்கியது. 

இதில் பயணம் செய்த 189 பேரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து விசாரணை இடம்பெற்று வருகிறது. 

விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களை தேடும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளில் ஒன்று ஏற்கனவே மீட்கப்பட்டது.

இந்த நிலையில் குரல் பதிவுக் கருவி அடங்கிய விமானத்தின் 2 ஆவது கருப்பு பெட்டி கடலுக்கு அடியில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.