2 ஆவது விசேட மேல் நீதிமன்றம் இரு வாரங்களுக்குள் நிறுவப்படும் - தலதா அத்துகோரள

Published By: Priyatharshan

14 Jan, 2019 | 09:07 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

பாரிய நிதிமோசடி தொடர்பான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ளும் இரண்டாவது விசேட மேல் நீதிமன்றம் இரண்டுவாரங்களுக்குள் நிறுவப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

அதற்கான நீதிபதிகள் நியமிக்கப்பட்டிருக்கின்றன. என்றாலும் குறித்த விசேட நீதிமன்றத்தை நிறுவ பொருத்தமான இடம் கிடைக்காதமையே தாமதத்துக்கு பிரதான காரணமாகும்.

அத்துடன் நீதிமன்ற சேவை அமைப்பு சட்டமூலத்தின் பிரகாரம் நீதி அமைச்சர் என்றவகையில் எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் கீழ் இந்த விசேட நீதிமன்ற அமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன். 

முதலாவது விசேட நீதிமன்றம் புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டு தற்போது வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. என்றாலும் இரண்டாவது நீதிமன்றம் அமையவிருக்கும் இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

பாரிய நிதிமோசடி தொடர்பான வழக்கு விசாரணைகளை முன்னெடுக்க மூன்று நீதிபதிகளைக்கொண்ட விசேட நீதிமன்றங்களை நிறுவும் பணி தாமதிப்பது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20