(நா.தினுஷா) 

தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு அமைவாக உரிய தகவல்களை சரியான சந்தர்ப்பத்தில் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. 

சில சந்தர்ப்பங்களில் தகவல் உரிமை சட்டத்தினூடாக கேள்விப்படுத்தும் நிறுவனம் தகவல்களை பெற்றுகொடுப்பதில் தொடர்ந்தும் குறித்த காலப்பகுதிக்குள் தகவல்களை பெற்றுக்கொடுக்க தயக்கத்தை காட்டி வருகின்றன. 

தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பாக ஊடகவியலாளர்களுடன் கலந்தாலோசிக்கும் சந்திப்பு இன்று திங்கட்கிழமை  இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இடம்பெற்றது.

ஒருசில நிறுவனங்களில் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான போதிய அறிவு இன்னம் நிர்வாக பிரிவுகளினூடாக பெற்றுக்கொடுக்கப்படவில்லை. இதனை அடியொட்டிய வகையில் தகவல் அறியம் உரிமை சட்டத்தினூடாக பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் தோற்றம் பெருகின்றன. 

சில நிறுவனங்களில் மொழி பிரச்சினைகள் பிரதானமாக சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆனால் குறித்த நிறுவனங்கள் அந்த குறைப்பாட்டை நிவர்த்தி செய்துக்கொள்வதற்கு தயக்கத்தையே வெளிப்படுத்தி வருகின்றன. 

இந்த கலந்துரையாடல் நிகழ்வில் நாடுபூராகவும் உள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் கலந்துக்கொண்டிருந்தனர். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.