(ஆர்.விதுஷா)

நாட்டின் வேறுபட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்புக்களின் போது 30 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான ஹெரொயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன்,  நான்கு பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம்  தெரிவித்துள்ளது.

 

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் நேற்றையதினம் தெஹிவளை, மீகொடை , பிலியந்தலை மற்றும் மாபாகே ஆகிய பொலிஸ் பிரிவுகளில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது. 

சந்தேக நபர்கள்  27 வயதிற்கும்  47 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் என  விசாரணைகளின்  போது தெரிய வந்துள்ள நிலையில்  சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குறித்த பகுதிகளுக்கு பொறுப்பான பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.