(எம்.மனோசித்ரா)

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலைமைகள் தற்போது  முழுமையாக சரி செய்யப்பட்டுள்ளன. அதில் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செயற்படாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயளாலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

இதேவேளை, வேறு கட்சிகள் அவ்வாறு செய்வதற்கும் இடமளிக்கப்பட மாட்டாது. எதிர்க்கட்சி தலைவர் பதவி விவகாரம் தொடர்பில் சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளமை உண்மைக்கு புறம்பானவை.

எதிர்கட்சி பதவி விவகாரம் தொடர்பில் சுதந்திரகட்சியின் 21 உறுப்பினர்களும் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற கருத்து தொடர்பாக வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.