ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பிரதமர் மற்றுமொரு கட்சியிலும்  இருந்துகொண்டு ஆட்சி செய்யவோ நாட்டை அபிவிருத்தி செய்யவோ முடியாதென சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் தேர்தல்களில் ஜனாதிபதியும் பிரதமரும் ஐக்கிய தேசிய முன்னணி என்ற ஒரே கட்சியில்தான் செயற்படுவார்கள். அதில் முஸ்லிம் காங்கிரஸ் பெரும் பங்கை வகிக்கும்.

போதுமான ஒத்துழைப்புக்கள் இன்மையால் போராடியே அபிவிருத்திகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதுமட்டுமல்ல நிதி ஒதுக்கீட்டினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் பல சேதப்படுத்தப்பட்டும் உள்ளன. அமைச்சராகிய நான் ஒரு பக்கமும் பிரதேச சபை ஒரு பக்கமும் இருந்து அபிவிருத்திகளை செய்ய முடியாது. நாட்டில் ஜனாதிபதி ஒரு பக்கமும் பிரதமர் ஒரு பக்கமும் இருப்பதைப் போன்றே நிந்தவூரில் அமைச்சு ஒரு பக்கமும் பிரதேச சபை மறு பக்கமும் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். 

ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பிரதமர் இன்னொரு கட்சியிலும்  இருந்துகொண்டு ஆட்சி செய்ய முடியாது. அதே போல் அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடியாது. எனவே எதிர்வரும் தேர்தல்களில் ஜனாதிபதியும் பிரதமரும் ஐக்கிய தேசிய முன்னணி என்ற ஒரே கட்சியில்தான் தெரிவு செய்யப்படுவார்கள் என்றார். 

நிந்தவூரில்  115 வீடுகளை அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றி போதே சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.