பன்னிரெண்டு பேர் அடங்கிய இலங்கை அரசாங்க உத்தியோகத்தர்களின் குழுவானது ஜனவரி 14 திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை பாகிஸ்தானிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. 

இவ்விஜயமானது  பாகிஸ்தானிய பொதுக்கொள்கைகளுக்கான தேசிய பாடசாலையுடன் இணைந்து கொழும்பில் அமைந்துள்ள பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் பணியகம் ஏற்பாடு செய்துள்ளது. 

இக்குழுவினர் பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓ) கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத்தை பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் காரியாலயத்தில் இன்று சந்தித்தனர். 

இக்குழுவுடனான சந்திப்பின்பொழுது, பாகிஸ்தானின் கொள்கை உருவாக்க முறைகள் மற்றும் அரச சேவை கட்டமைப்பு தொடர்பான விரிவான அறிவினை பெற்றுக்கொள்வதற்கு இவ்விஜயமானது சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என உயர் ஸ்தானிகர் கலாநிதி ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் தெரிவித்தார். 

அத்துடன்  இவ்விஜயமானது இருநாட்டு மக்களிற்கிடையிலான  தொடர்புகள் மற்றும் அரச சேவையின் கீர்த்தியினை மேலும் அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இக்குழுவானது அரச நிறுவனங்கள் நீங்கலாக லாஹிர் மற்றும் தக்ஷில்லா அரும்பொருட்காட்சியகம், வஹா எல்லைப்பகுதி மற்றும் வெவ்வேறு கல்வியியல் நிறுவனங்களுக்கும் விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

மேலும் பாகிஸ்தானிய வெளியுறவு செயலர் மற்றும் ஏனைய உயர் மட்ட அரச பிரமுகர்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடதக்கது.