வவுனியாவில் வெடிபொருட்கள் மீட்பு

Published By: Digital Desk 4

14 Jan, 2019 | 03:57 PM
image

வவுனியா மடுக்குளம் பகுதியிலுள்ள தோட்ட காணியிலிருந்து வெடிபொருட்களை பூவரசங்குளம் பொலிஸார் இன்றைய தினம் மீட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக வவுனியா மடுக்குளம் பகுதியிலுள்ள தனியார் காணியை அதன் உரிமையாளர் உழவியந்திரம் மூலம் பண்படுத்தியுள்ளார். பண்படுத்தப்பட்ட குறித்த காணியில் சிறுவன் ஒருவன் விளையாட சென்ற நிலையில் உரப்பொதியில் சுற்றிவைக்கபட்டு சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்து தனது தந்தைக்கு தெரியபடுத்தியுள்ளான். 

பின்னர் குறித்த விடயம் பூவரசங்குளம் பொலிஸாருக்கு தெரியபடுத்தபட்ட பின் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த உரப்பொதியை சோதனை செய்து பார்த்தபோது மூன்று கைக்குண்டுகள் மற்றும் ரி56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தபடும் ரவைகள், கோல்சர் என்பவற்றை அவதானித்ததாக தெரிவித்தனர்.

எனினும் மண்ணில் புதையுண்டு கிடப்பதால் மேலும் வெடிபொருட்கள் அதனுள் இருக்கலாம் என்று தெரிவித்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசேட அதிரடிபடையினருக்கும் தகவல் தெரிவித்தனர். 

நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த பகுதியை ஆழமாக்கி சோதனை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இக் கிராமத்தில் இருந்து அண்மையிலும் வெடிபொருட்கள் மீட்கபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21