(இராஜதுரை   ஹஷான்)

 ஜனாதிபதி  விசாரணை  ஆணைக்குழு  சமர்ப்பித்த பிணைமுறி தொடர்பிலான  அறிக்கை  இதுவரையில்  பாராளுமன்றத்தில்  விவாதத்திற்கு  எடுத்துக்கொள்ளப்படவில்லை.  இச்செயற்பாடு  குற்றவாளிகளை  பாதுகாப்பதாகவே   காணப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர்  காமினி   லொக்குகே  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

மத்திய  வங்கியில்  இடம் பெற்ற  பிணைமுறி   மோசடி  விவகாரத்தில்  குற்றவாளிகளாக அடையாளம்  காணப்பட்டு  சிறையில் தண்டனை அனுபவிக்க  வேண்டியவர்கள் இன்று  அமைச்சரவையில்  சுகபோகங்களை  அனுபவிக்கின்றனர் .

ஜனாதிபதி  விசாரணை  ஆணைக்குழு  சமர்ப்பித்த பிணைமுறி  தொடர்பிலான  அறிக்கை  இதுரையில்  பாராளுமன்றத்தின்  விவாததத்திற்கு  எடுத்துக்கொள்ளப்படவில்லை.  இச்செயற்பாடு  குற்றவாளிகளை  பாதுகாப்பதாகவே   காணப்படுகின்றது.

ஊழல்மோசடிகளை   ஒழித்து   தேசிய  நிதியினை  கொள்ளையடித்தவர்களுக்கு   தண்டனை  பெற்று  தருவதாக  குறிப்பிட்டே    ஐக்கிய  தேசிய  கட்சி    ஆட்சியினை  கைப்பற்றியது.  ஆட்சிக்கு  வந்து  ஒரு  மாதகாலத்திற்குள்ளே மத்திய  வங்கியின்    பிணைமுறி   கொடுக்கல்  வாங்கல்  விவகாரத்தில்  பாரிய  நிதியினை  மோசடி   செய்தது.  இம்மோசடி  தொடர்பில்   அப்போது  எதிர்க்கட்சியாக செயற்பட்ட  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  எவ்வித  கருத்துக்களையும்  குறிப்பிடாமல் ஆளும் தரப்பினருக்கு  ஆதுரவாகவே   செயற்பட்டனர்.

மத்திய  வங்கியின்  பிணைமுறி  விவகாரத்தில்   எவ்வித   மோசடிகளும் இடம் பெறவில்லை   என்று   ஐக்கிய  தேசிய  கட்சி    குறிப்பிட்டது. ஆனால்   பொதுஜன   பெரமுனவினர் தொடர்ந்து  ஏற்படுத்திய  அழுத்தங்களுக்கு  அமைய  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன  பிணைமுறி  மோசடி  விவகாரம்  தொடர்பில்    சுயாதீனமாக  விசாரணைகளை   மேற்கொள்ளும்  ஜனாதிபதி  விசாரணை  ஆணைக்குழுவை   நியமித்தார்.  ஆணைக்குழுவும்  எவ்வித  பக்கச்சார்புகளும்  இன்றி  விசாரணைகளை   ஜனாதிபதியிடம் கையளித்தது.

 ஆனால்  பாரிய  போராட்டத்தின்  மத்தியில்  சமர்ப்பிக்கப்பட்ட  அறிக்கையினால்  எவ்வித   மாற்றங்களும்  இதுவரையில்  ஏற்படவில்லையென அவர் மேலும் தெரிவித்தார்.