வென்னப்புவ - வேலக்கந்தி தேவாலயம் மற்றும் மாத்தறை - மடிகே பிரதேசங்களில் கடலலையில் சிக்கி இரு வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வென்னப்புவ, வேலங்கன்னி ஆலயத்திற்கு அருகில் உள்ள கடற்பகுதியில் நீராட சென்ற 28 வயதான ஜேர்மன் நாட்டைச் சேர்ந்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

இதேவேளை, மாத்தறை, மடிஹ பகுதியில் கடல் அலையில் விளையாடிக் கொண்டிருந்த 36 வயதுடைய பிரித்தானிய நாட்டவர்  ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். 

சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.