வத்தளை ஹேகித்த பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வத்தளை, ஹேகித்த பகுதியில் இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பகுதியில் நேற்று மாலை, காரொன்றில் சென்றுக் கொண்டிருந்தவர்கள் மீது, மற்றுமொரு காரில் வந்தவர்களால் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 31 மற்றும் 38 வயதுடைய இருவர்  உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, துப்பாக்கி சூடு பும்மா எனப்படும் பாதாள உலக குழுவினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் குறித்த பாதாள உலகக் குழுவுக்கும் குடு செல்லி எனப்படும் பாதாள உலக குழுவுக்கும் இடையிலான முறுகலே குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்குப் பின்னணியில் அமைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.