விளையாட்டு பயிற்சியாளர்களை நியமிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு

Published By: Digital Desk 4

14 Jan, 2019 | 01:23 PM
image

நாடுபூராவும் பாடசாலைகளில் 3850 விளையாட்டுப் பயிற்சியாளர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானத்துக்கு கல்வித்துறைத் தொழிற்சங்கங்களிடமிருந்து கடுமயைான எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.

கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவாசத்தினால் சமரப்பிக்கப்பட்ட யோசனையை அமைச்சரவை கடந்தவாரம் அங்கீகரித்ததையடுத்து விளையாட்டுப் பயிற்சியாளர்களை நியமிக்கும் செயன்முறைகளை முன்னெடுப்பதில் அமைச்சு இறங்கியிருக்கிறது.

" விளையாட்டுப் பயிற்சியாளர்களின் சம்பளத்தை மத்திய அரசாங்கமே கொடுக்கவிருக்கிறது. அதனால் அவர்களின் சம்பளத்துக்காக மாகாண சபைகள் அவற்றின் நிதியைச் செலவிடவேண்டியதில்லை" என்று அமைச்சர் காரியவாசம் கூறியிருக்கிறார். 

பயிற்சியாளர்களாக நியமிக்கப்படுபவர்களுக்கான பயிற்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்படும்.தேசிய மட்டத்திலும் மாகாண மட்டங்களிலும் தங்களது விளையாட்டுத்துறை ஆற்றல்களை நிரூபித்தவர்களே தெரிவுசெய்யப்படுவார்கள். ஆசிரியர்களைப் போலன்றி இந்த பயிற்சியாளர்கள் விளையாட்டு மைதானங்களிலேயே இருந்து செயற்படக்கூடியவர்களாக இருப்பர் என்றும் அமைச்சர் காரியவாசம் தெரிவித்தார். 

3850 பேர் இதற்காக தெரிவுசெய்யப்பட்டு நியமனங்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

ஆனால், ஆசிரியர் சேவைப் பதிவேட்டுக்கு முரணாக விளையாட்டுப் பயிற்சியாளர்கள் நியமனம் அமைவதால் அதை நிறுத்துமாறு தாங்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்தார். 

" சுமார் 4000 விளையாட்டு ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இருக்கின்ற நிலையில் அதை நிரப்புவதில் அக்கறைப்படாமல் கல்வியமைச்சு பயிற்சியாளர்களை ஏன் அறிமுகப்படுத்துகிறது என்பதே தங்களது கேள்வி என்றும் ஜெயசிங்க குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37