முல்லைத்தீவில் பால் நிலையங்களில் இன்று மக்கள் நிரம்பியிருந்தமையைக் காணக்கூடியதாயிருந்து.

நாளை தினம் தைப் பொங்கல் கொண்டாடப்படவுள்ள நிலையில், இவ்வாறு பால் நிலையங்களில் வழமைக்கு மாறாக மக்கள் நிரம்பிக் காணப்படுகின்றனர்.

இவ்வாறு பால் நிலையங்களுக்கு வந்தவர்களில் சிலர் பால் இல்லாது ஏமாற்றத்துடன் செல்வதையும் காணமுடிந்தது.

மேலும் வியாபார நிலையங்களிலும் மக்கள் பொங்கல் பொருட்கள் வாங்குவதற்காக வழமைக்கு மாறாக நிறைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.