மேற்கு சூடானில் இடம்பெற்ற வீதி விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடானின் தலைநகர் கர்த்தூமிலிருந்து சென்ற பயணிகள் பஸ் ஒன்று, வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதியதிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் மேலும் பலர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்விபத்து வடக்கு டார்பூர் மற்றும் மேற்கு கொர்டாஃபன்  மாநிலம் இடையே  உள்ள உம் கடதா எல்லையில் மேற்கு சால்வேஷன் வீதியில் இடம்பெற்றுள்ளது. 

இதேவேளை, போக்குவரத்து நெரிசலில் அதிகமானோர்  உயிரிழந்த நாடுகளின் பட்டியலில் சூடானும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.