இந்தியா, சிவகாசி மாவட்டத்தில் சுமார் ஒரு மாதத்துக்கு முன்னர் காணாமல் போன 17 வயதுடைய இளைஞனொருவன், எலும்புகூடாக கிடந்ததை பார்த்த பெற்றோர் கதறி அழுதுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இளைஞன், பள்ளி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளான். இதனை அறிந்த குறித்த மாணவியின் பெற்றோர் இளைஞனை தாக்கியுள்ளனர்.

இந்நிலையில் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் குறித்த இளைஞன் காணாமல் போயுள்ளார். இதுகுறித்து பொலிசிலும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

பொலிஸாரின் தீவிர தேடல் நடவடிக்கைகளையடுத்து , காட்டு பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவ்விளைஞன் எலும்பு கூடாக மீட்கப்பட்டுள்ளர்.

சம்பவ இடத்தை தடவியல்துறை நிபுணர்களும், மோப்பநாய் மூலமாகவும் விசாரணை மேற்கொண்ட போலீசார், இளைஞன் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பதை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றமையும் குறிப்பிட தக்கது.