கிறீஸி குழுமத்தின் துணை நிறுவனமான லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெட் (Lanka SSL), தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் 2018 நிகழ்வில் “உற்பத்தியாளர் - ஏனைய பிரிவு” இல் வெற்றியாளராகவும் பாரிய பிரிவில் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.

வருடாந்தம் இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் இந்த வர்த்தக சிறப்பு நிகழ்வினூடாக, குறித்த துறையில் சிறப்பாக செயலாற்றும் வியாபாரங்களின் நடவடிக்கைகளை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மேலும், சிறந்த மேலாண்மை, திறன் மற்றும் ஆற்றல் ஆகியவற்றைக் கொண்ட நிறுவனங்கள் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் ஆற்றும் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் நிகழ்வு அமைந்துள்ளது.

கடந்த ஐந்தாண்டு காலப்பகுதியில் நிறுவனம் குறிப்பிடத்தக்களவு வெற்றிகளை பதிவு செய்துள்ளதுடன், உள்நாட்டு உற்பத்தித்துறையில் உறுதியான நிலையை பதிவு செய்துள்ளதுடன், தேசத்தின் பொருளாதாரத்துக்கும் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கியுள்ளது. லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெடின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரவீன டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில்,

“எமது கூட்டாண்மை சிறப்புக்காக நாம் கௌரவிக்கப்பட்டுள்ளோம். இந்த விருதுகளினூடாக சவால்களை நாம் சமாளித்து எவ்வாறு உயர்ந்த நிலையை எய்தியுள்ளோம் என்பது எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளதுடன், நீரினுள்ளிருந்து தாமரை எவ்வாறு வளர்ந்து மலரும் என்பதைப் போன்றதாக இது அமைந்துள்ளது.” என்றார்.

லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெட், சந்தையில் காணப்படும் ஒப்பற்ற முன்னணி நிறுவனமான திகழ்கிறது. வருடாந்தம் சுமார் 12,500 மெட்ரிக் டொன்கள் எடை கொண்ட உயர் வெப்பநிலையில் கல்வனைஸ் செய்யப்பட்ட கம்பி, கல்வனைஸ் செய்யப்படாத கம்பி, பார்ப்ட் கம்பிகள் போன்ற நிர்மாணத்துறைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்த வண்ணமுள்ளது.

ISO 9001: 2015 மற்றும் SLS சான்றுகளைப் பெற்ற உற்பத்தியாளரான லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெட், உயர் தரம் வாய்ந்த ஜேர்மன் நாட்டு தொழில்நுட்பத்திலமைந்த பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் புகழ்பெற்றுத் திகழ்கிறது. அதன் GI கம்பிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச தரங்களின் அடிப்படையில் சிறந்த மூலப்பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 வருட காலமாக நிறுவனம் உயர் தர உற்பத்திகளை வழங்குவதில் தனது கீர்த்தி நாமத்தை பேணி வருகிறது. நிறுவனத்தின் உயர் தகைமை வாய்ந்த அணியினர், தனிநபர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் சேவைகளை வழங்கி வருகின்றனர்.

லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெட், உயர் வளர்ச்சி மற்றும் தூர நோக்குடைய தலைமைத்துவம் தொடர்பில் கவனம் செலுத்தி வரும் நிறுவனமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக நிறுவனத்தின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு வழங்கப்படுகிறது. மேலும் தனது ஊழியர்கள் மற்றும் தயாரிப்புகளுக்கும் பெறுமதி சேர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது. 

புத்தாக்கமான முறையில் ஊழியர் நலன்புரி செயற்பாடுகள், ஈடுபாடு மற்றும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கிறது.

புத்தாக்கமான வகையில் கம்பிகள் உற்பத்தியாளராக திகழும் லங்கா ஸ்பெஷல் ஸ்டீல் லிமிடெட், ஆய்வுகள் மற்றும்  அபிவிருத்தி செயற்பாடுகள் போன்றவற்றில் கவனம் செலுத்துவதுடன் போட்டிகரமான அனுகூலத்தையும் பெறுகிறது.

மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் அண்மையில் கைகோர்த்து, இரு நிலைகளில் ஆய்வு செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. இதனூடாக இந்நிறுவனம் மேலும் நேரடி ஏற்றுமதி செயற்பாடுகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளது.