பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வாரம் மேற்­கொள்­ள­வுள்ள சீன விஜ­யத்தின் போது இரு நாடு­க­ளுக்­கி­டை­யி­லான சுதந்­திர வர்த்­தக உடன்­ப­டிக்­கையை உரு­வாக்­கு­வது தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­களில் ஈடு­ப­ட­வுள்ளார்.

அது­மட்­டு­மன்றி பல்­வேறு உடன்­ப­டிக்­கை­களும் இந்த விஜ­யத்தின் போது கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ளன. முத­லீ­டு­களை ஊக்­கு­வித்தல், பொரு­ளா­தார மற்றும் தொழில்­நுட்ப கூட்­டு­றவு சிறு­நீ­ரக நட­மாடும் சேவை, விளை­யாட்டு கூட்­டு­றவு சுற்­று­லாத்­து­றையை ஊக்­கு­வித்தல், தெற்கு அதி­வேக பாதைக்­கான இரண்டாம் கட்ட அபி­வி­ருத்தி கம்­பஹா அத்­த­ன­கல்ல, மினு­வங்­கொடப் பகு­தி­க­ளுக்­கான நீர்­வ­ழங்கல் கடன் உடன்­ப­டிக்கை போன்­றன கைச்­சாத்­தி­டப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

எதிர்­வரும் புதன்­கி­ழமை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சர்­வ­தேச வர்த்­தக மற்றும் உபாய அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம மற்றும் அமைச்­சர்­க­ளான நிமல் சிறி­பால டி சில்வா , சரத் அமு­னு­கம, ரவூப் ஹக்கீம் ஆகியோர் பீஜிங் பய­ண­மா­கின்­றனர். தற்­போது அவுஸ்­தி­ரே­லியா சென்­றுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அங்­கி­ருந்­த­வாறு பீஜிங் பய­ணிக்­க­வுள்ளார்.

சீன ஜனா­தி­பதி பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.