ரோகித்தின் சதம் வீணாய் போக இந்தியாவை 34 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தியது அவுஸ்திரேலியா

Published By: Digital Desk 4

12 Jan, 2019 | 06:24 PM
image

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கிடையில் இன்று சிட்னியில்  இடம்பெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலியா வெற்றிபெற்றது.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா மோதும் முதலாவது ஒருநாள் போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இந்நிலையில் நிர்ணைக்கப்பட்ட  50 ஓவர்களில்  அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அந்த வகையில் ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹேண்ட்ஸ்கோம்ப் 61 பந்துகளில் 73 ஓட்டங்களையும், கவாஜா 81 பந்துகளில் 59 ஓட்டங்களையும், மார்ஸ் 70 பந்துகளில் 54 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்தியா அணியின் புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜடேஜா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதையடுத்து 289 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.

அந்த வகையில் தவான் டக் ஆட்டமிழந்து வெளியேற. அடுத்து வந்த அணி தலைவர் விராட் கோலி  வெறும் 3 ஓட்டங்களுடன்  வெளியேறினார். பின் வந்த அம்பதி ராயுடு ஓட்டம் ஏதும் பெறவில்லை.

அதனையடுத்து ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார் டோனி. இருவரும் நிதானமாக விளையாடி வந்த நிலையில். அரை சதமடித்த டோனி 51 ஓட்டங்களுடன் வெளியேறியமை அதிர்ச்சியளித்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுபுறம் ரோகித் சர்மா தனி ஒருவராகப் போராடி சதமடித்தார். இருப்பினும் கடைசியில் அவரது போராட்டம் வீணானது. அவர் 129 பந்துகளில் 6 ஆறு ஓட்டம், 10 நான்கு ஓட்டம் அடங்கலாக 133 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் வெளியேறினார். இதைத்தொடர்ந்து இறுதிக்கட்ட விக்கெட்டுகளும் விரைவில் விழுந்தன.

இறுதியில், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதனால் அவுஸ்திரேலியா  அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 

அவுஸ்திரேலியா அணி சார்பில் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டும், ஜேசன் பெஹர்ண்டாப், ஸ்டோனிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21