(ஆர்.விதுஷா)

காலி - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்  இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். 

வாத்துவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தல்பிட்டிய சந்திக்கு  அண்மையில் நேற்று அதிகாலை 1.50 மணியளவிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக வாத்துவ  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறுக்கு பாதையிலிருந்து காலி - கொழும்பு பிரதான வீதியை நோக்கி பயணித்த  மோட்டார் சைக்கிளொன்றுடன்  கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த கார் மோதுண்டு விபத்துக்குள்ளானமையினாலேயே மேற்படி விபத்து சம்பவித்துள்ளது. 

மோட்டார் சைக்கிள்சாரதி உட்பட அதில் பயணித்த மற்றுமொரு நபரும்  படுகாயமடைந்த நிலையில் பாணதுறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையடுத்து  சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார். 

.உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பாணதுறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி வைத்தியசாலையில் சிகிச்சைகளை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்துடன்  தொடர்புடைய வேன் சாரதியை கைது செய்துள்ளதுடன்,  மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.