(எம்.மனோசித்ரா)

 புதிய அரசியலமைப்பிற்கான தேவை இருந்த போதிலும் அதற்கான காலம் போதாது என மக்கள் விடுதலை முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பொன்றினை உருவாக்குவதற்கான தேவை இருந்தாலும் அதற்கு பாராளுமன்றத்தில் இடமில்லை. 

தற்போது பாராளுமன்றத்திலுள்ள உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய கொள்கைகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. 

 இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால் அது தொடர்பில் மாகாண சபைகளுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டிய அவசியமாகும். எனினும் தற்போது எமது நாட்டில் சில மாகாண சபைகளுக்கான ஆயுட்காலம் நிறைவடைந்து அவை காலாவதியாகியுள்ளன. இன்னும் சில மாகாணசபைகளுக்கான காலம் சில மாதங்களில் நிறைவடையவுள்ளன. ஆனால் இன்னும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை. 

குறுகிய காலத்திற்குள் அவசரமாக அரசியலமைப்பு வரைபொன்றினை முன்வைக்கவும் முடியாது என நாம் கருதுகின்றோம் என்றார்.