தேசிய பாடசாலைகளுக்கு  அதிபர்கள் நியமனத்தில் தாமத நிலை ஏற்பட்டுள்ளது. 

 கடந்த வருட இறுதியில் 51 நாட்கள் நீடித்த அரசியல் நெருக்கடியின் காரணமாக தடங்கலுக்குள்ளான 353 தேசியப் பாடசாலைகளின் அதிபர் பதவிகளுக்கான நேர்முகப் பரீட்சை மேலும் தாமதிக்கப்படுகிறது.

 அக்டோபர் 26 ஆம் திகதி அரசாங்கம் பதவிநீக்கப்படுவதற்கு முன்னதாக நேர்முகப் பரீட்சையொன்றுக்குத் தோற்றுமாறு கேட்கப்பட்ட அதிபர் பரீட்சார்த்திகள் தங்களது நியமனங்களுக்காக இன்னமும் காத்திருக்கிறார்கள் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்திருக்கிறது.

தேசிய பாடசாலைகளின் அதிபர் பதவிகளுக்கு 303 வெற்றிடங்கள் இருக்கின்றன.இப்போது அந்த பாடசாலைகள் கல்வியமைச்சினால் நியமிக்கப்பட்ட பதில் அதிபர்களினால் நிருவகிக்கப்படுகின்றன என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்.செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.