இன்று முதல் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் மழையுடனான வானிலையை எதிர்பார்ப்பதாக அந்த நிலையத்தின் பதில் பணிப்பாளர் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2 நாட்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும்.

இதன் காரணமாக இடி-மின்னல் தாக்கங்களைத் தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.