தைப்­பொங்­கலை முன்­னிட்டு வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளி­லுள்ள சகல மாகாணப் பாட­சா­லை­க­ளுக்கும் தைப்­பொங்­கல்­ தி­னத்­திற்கு முதல்­தி­ன­மான திங்­க­ளன்று விடு­முறை வழங்­கப்­பட்­டுள்­ள­தா­க­ தெரிவிக்கப்பட்டுள்ளது.. 

இதற்­கான அனு­ம­தியை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்­லாஹ்வும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராக­வனும் வழங்­கி­யுள்­ளனர்.

தைப்­பொங்­க­லுக்கு முதல் தின­மான திங்­கட்­கி­ழமை விடு­முறை வழங்­கப்­பட்­டுள்­ளதால் அதற்­கான நாள் இம்மாதம் 19ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தைப்­பொங்­க­லை­ முன்னிட்டு இவ்­வா­றா­ன­தொரு விடு­மு­றையை வழங்­கி­யுள்­ள­தை­யொட்டி வடக்கு, கிழக்கு தமிழ்ச்­சமூகம் ஆளு­நர்­க­ளுக்கு நன்­றி­களைத் தெரிவித்துள்ளது.