தமிழகத்திற்கு நன்மை செயப்வர்களுடன் தான் அ.தி.மு.க கூட்டணி அமைக்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் இன்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாற்று கட்சியிலிருந்து அ.தி.மு.கவில் இணைய வந்த உறுப்பினர்களின் முன்னிலையில் பேசியதாவது...

“ அனைத்து மக்களும் சிறப்பாக பொங்கலை கொண்டாட வேண்டும் என்பதற்காக ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. மக்களின் தேவை என்ன என்பதை உணர்ந்து அரசு செயல்படுவதால் அ.தி.மு.கவிற்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது. 

தமிழகத்திற்கு நன்மை செய்பவர்களுடன் தான் அ.தி.மு.க கூட்டணி அமைக்கும். துரோகம் செய்பவர்களுக்கு அ.தி.மு.க ஆதரவு அளிக்காது.

கிராமத்தையே பார்க்காதவர் ஸ்டாலின். ஏனெனில் அவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். துணை முதல்வர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது செல்லாமல் தற்போது கிராமங்களுக்கு செல்கிறார். அத்துடன் அவர் அ.தி.மு.க அரசைப் பற்றி ஸ்டாலின் தவறான கருத்துகளை பரப்பி வருகிறார். ” என்றார்.