இலங்கையினை சேர்ந்த ரௌத்திரம் இசைக்குழுவினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு “தலைவர் குத்து” என்ற பாடலினை வெளியிட்டுள்ளனர்.

குறித்த பாடல் யஜீவன் இசையமைப்பிலும் யஜீவன்,பிரவீன்த் மற்றும் கமலேஷ் ஆகியோரின் வரிகளில் உருவாகியுள்ளது.

மேலும் இப்பாடலை யஜீவன் மற்றும் சக்திவேல் பாடியுள்ள நிலையில் இப்பாடலில் இடம்பெற்றுள்ள சொல்லிசையினை கபிலாஷினி மற்றும் எஸ்.ஜீ.பிரபு பாடியுள்ளனர்.

அத்தோடு இப்பாடலின் இசைக்கலவையினை பிரேம்ராஜ் செய்துள்ளதோடு, பாடலின் ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பினை கஜன் கலையமுதன் மற்றும் பீரவீன் குமார் செய்துள்ளனர்.

இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள குறித்த பாடல் தற்போது தலைவர் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது