மட்டக்களப்பில் இடம்பெற்ற பூர்ண ஹர்த்தாலையிட்டு வீதியில் டயர் எரித்த சம்பவம் தொடர்பில்  நேற்று வெள்ளிக்கிழமை இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்

கிழக்கு மாகாண ஆளுநராக எம். ஹஸ்புல்லா நியமிக்கப்பட்டதை கண்டித்து கிழக்கு மக்கள் ஒன்றியம் தலைமையில்  நேற்று வெள்ளிக்கிழமை பூரண ஹர்தாலுக்கு துண்டுப்பிரசுர மூலம் அழைப்பு விடுவிக்கப்பட்டது 

இதனையடுத்து காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்க கல்லூரிக்கு அருகாமையில்; நேற்று காலை நடு வீதியில் டயர் போடப்பட்டு எரிக்கப்பட்டது 

இதனையடுத்து வீதியில் டயர் போட்டு எரித்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் நாவற்குடா பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் , 23 வயதுடைய இரு இளைஞர்களை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலுக்கமைய கைது செய்யப்பட்டனர் 

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்