(ஆர்.யசி, எம். ஆர்.எம்.வசீம்)

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாட்டில் முதல் தடவையாக தமிழ் அரசியல் கட்சியின் பங்களிப்பு காணப்படுகிறது. ஆகவே தற்பொழுது கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பை இரண்டு பிரதான கட்சிகளும் தவறவிட்டால் நாட்டுக்கு பேரழிவாகவே அது அமையும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

இன்று இடம்பெற்ற அரசியலமைப்புசபை அமர்வில்  கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறிய அவர்,

சுதந்திரம் அடைந்த பின்னர் முதற் தடவையாக அரசியலமைப்புச் செயற்பாடுகளில் தமிழ் அரசியல் கட்சியொன்று பங்கெடுத்துள்ளது என சிலர் சபையில் சுட்டிக்காட்டினர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதிவரை அர்ப்பணிப்புடன் பணியாற்றும் எனவும் தெரிவித்தார்.