(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

மத்திய வங்கி பிணைமுறி மோசடி இடம்பெற்று நான்கு வருடங்கள் ஆகின்ற நிலையில் அர்ஜுன் மஹேந்திரனை அழைத்துவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று பிற்பகல் பிரதான நிகழ்வுக்கள் நிறைவடைந்த பின்னர் இலங்கை, துருக்கி ஆட்களை மீள ஒப்படைத்தல் உடன்படிக்கை மீதான விவாதம் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

அரசாங்கம் துருக்கியுடன் மேற்கொண்டுள்ள ஆட்களை மீள ஒப்படைத்தல் உடன்படிக்கைபோன்று சிங்கப்பூருடனும் மேற்கொண்டு, மத்திய வங்கி பிணைமுறி மோசடியின் பிரதான சந்தேக நபரான அர்ஜுன் மஹேந்திரனை அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டும். 

இதன் மூலமே ஐக்கிய தேசிய கட்சிக்கும் குற்றச்சாட்டுக்களில் இருந்து தூய்மையாக முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.